"சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வேண்டும்"- சீனா வலியுறுத்தல்
சீன செயலிகளுக்கு தடை விதித்த விவகாரத்தில் இந்தியா தவறிழைத்துள்ளதாக சீனத் தூதரகம் கூறியுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தொடர்ந்து, அவற்றிற்கு குளோன்களாக செயல்பட்ட 47 செயலிகளையும் மத்திய அரசு தடை செய்தது.
மேலும், 200-க்கும் மேற்பட்ட செயலிகளை தடை செய்யவும் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருநாடுகளுக்கு இடையேயான நடைமுறை ஒத்துழைப்பில் வேண்டுமேன்றே இந்தியா குறுக்கிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் நலன்களுக்கு நன்மை பயக்காது எனவும், தங்கள் நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்க சீனா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments